Weathercast -timenews tamil

தமிழ்நாடு
Advertisement

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment