Silence -timenews tamil
மாதவன், அனுஷ்கா, அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டே முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ‘சைலன்ஸ்' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியாகி வைரலாகிவருகிறது.
ஹேமந்த் மதுகுமார் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘நிசப்தம்'. தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் தயாராகியுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கு ‘சைலன்ஸ்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டார். அதில் ரசிகர்கள் படத்தை எங்கு பார்க்க விரும்புகிறார்கள் என்று வாக்களிக்கும்படி கேட்டிருந்தார். வாக்கெடுப்பில் தியேட்டர்கள், OTT மற்றும் எதுவாக இருப்பினும் சரிதான் என மூன்று விருப்பங்கள் கொடுக்கப்பட்டிருதன. அதில் OTTக்கு ரசிகர்கள் 56 சதவீதத்துடன் வாக்களித்தனர்.
Comments
Post a Comment